பள்ளிச் சிறுமியுடன் எல்லை மீறிய காதல்.. விஷம் ஊற்றி மாணவர் கொலை.. மகள் தற்கொலையால்  தந்தை ஆவேசம்..!

0 4877
பள்ளிச் சிறுமியுடன் எல்லை மீறிய காதல்.. விஷம் ஊற்றி மாணவர் கொலை.. மகள் தற்கொலையால்  தந்தை ஆவேசம்..!

பள்ளிச் சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி தற்கொலைக்கு தூண்டிய கல்லூரி மாணவர் வாயில் விஷம் ஊற்றி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகா கல்கவடாகி என்ற கிராமத்தை சேர்ந்தவர் குரப்பா, கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிச்சிறுமியான தனது மகளை காதல் வலையில் வீழ்த்திய
கோனசகி கிராமத்தை சேர்ந்த மல்லு ஜமகண்டி என்ற 21 வயது கல்லூரி மாணவர் கடத்திச்சென்று விட்டதாகவும் அவரை மீட்டுத்தரும்படியும் புகார் அளித்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் குரப்பாவின் மகளும், கல்லூரி மாணவர் மல்லுவும் காதலித்ததும், அவர்களது காதலுக்கு குரப்பா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து குரப்பாவை விசாரணை வளைத்துக்குள் கொண்டு வந்தனர். இதில் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. தனது மகளின் காதல் விவகாரம் தெரியவந்ததும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த குரப்பா , மாணவன் மல்லுவுடனான காதலை கைவிடும்படி மகளை எச்சரித்துள்ளார்.

இதற்கு அவரது மகள் மறுத்து விட்ட நிலையில் கடந்த 22-ந் தேதி காதலியைத்தேடி வீட்டிற்கு சென்ற மாணவர் மல்லு, காதலியை தனிமையில் சந்தித்து பேசி உள்ளார். இதனை குரப்பா பார்த்துவிட்டார். தனது மகளை கடுமையாக எச்சரித்ததால் மனம் உடைந்த அந்த சிறுமி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த குரப்பா தனது மகளின் காதலன் மல்லுவை அழைத்து வந்து சரமாரியாக தாக்கி வாயில் வலுக்கட்டாயமாக விஷத்தை ஊற்றி கொலை செய்துள்ளார்.

கொலையை மறைப்பதற்காக தனது மகள், மற்றும் மகளின் காதலன் ஆகியோரது சடலங்களை தனி தனி சாக்குப்பையில் மூட்டையாக கட்டி கிருஷ்ணா ஆற்றில் வீசியதாக குரப்பா பரபரப்பு வாக்குமூலம் அளித்தார்.

பாகல்கோட்டை மாவட்டம் பீலகியில் ஓடும் கிருஷ்ணா ஆற்றில் மிதந்து வந்த மல்லுவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

குரப்பா மகளின் சடலத்தை தேடிவரும் போலீசார், குரப்பா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அஜீத் ஆகிய இருவரையும் கொலை வழக்கில் கைது செய்தனர்.

விஷம் குடித்த மகளின் சாவுக்கு பழிக்கு பழியாக காதலனின் வாயில் தந்தை விஷம் ஊற்றி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments